பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகளை ஆடு, மாடுகளைப்போல நடத்தும் ராணுவம்.. குற்றச்சாட்டு..
பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகளை ஆடு, மாடுகளைப்போல நடத்தும் ராணுவம்.. குற்றச்சாட்டு..

பாகிஸ்தானில் கொரோனா தொற்று பஞ்சாப், சிந்து மாகாணத்தில் மிக அதிகமாக உள்ளது. இது வரை எட்டு பேர் பலியாகியுள்ளனர். 1000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதால் பாகிஸ்தான் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. அதே சமயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இராணுவத்தினர் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அவர்களை ஆடு, மாடுகளை போல இராணுவ வாகனங்களில் அடைத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர், முசாபராபாத் மற்றும் பலுசிஸ்தானின் கில்ஜித் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் 19 நோயாளிகளை இராணுவ வாகனங்களில் வைத்து அடைத்து கொண்டு சென்றதாக மக்கள் கூறுகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் முறையான மருத்துவமனைகள் இல்லை. அங்கு தற்காலிக மருத்துவ மனைகளை அமைத்து அங்கு கொண்டு செல்கிறது. பஞ்சாப், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இராணுவ மருத்துவமனைகள் இருந்தும் அங்கு வைத்து சிகிச்சை தர இராணுவ அதிகாரிகள் மனிதாபிமானமின்றி மறுத்துவிட்டனர். மற்ற இடங்களிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பஞ்சாப்பை கொரோனாவில் இருந்து சுத்தப்படுத்த ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், கில்ஜித்தையும் பாகிஸ்தான் அரசு குப்பைத் தொட்டியாக கருதுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண காய்ச்சலுக்கு கூட முறையான மருத்துவ வசதி இல்லாத இப்பகுதிகளில் கொரோனா நோயாளிகளால் மிகப்பெரிய விபரீதத்தில் சிக்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
https://metrosaga.com/pakistan-army-forcibly-moving-covid-19-patients-to-pok/