கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு பாலக்காட்டில் சிறப்பு முகாம்.. ஆரம்பத்தில் அமைக்க தவறிய கேரள அரசு.. தோழர்கள் மௌனம்..
கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு பாலக்காட்டில் சிறப்பு முகாம்.. ஆரம்பத்தில் அமைக்க தவறிய கேரள அரசு.. தோழர்கள் மௌனம்..

கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு பாலக்காட்டில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரோனா பிரச்சனை எழுந்தவுடன் போர்க்கால அடிப்படையில் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல நடவடிக்கை எடுத்ததாக" கூறினார்.
கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, முட்டை, பால் ஆகியவற்றை தொடர்ந்து தடையின்றி அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு நன்றிகளை கேரளா நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணா குட்டி தெரிவித்ததாகவும் மேலும் கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு பாலக்காட்டில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஆணையின் பேரில் அம்மாநிலம் அரசாங்கத்திடமும் பாலக்காடு ஆட்சியரிடம், இது குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் வரவேண்டாம் என தெரிவித்தார்.