இல்லாத பிரச்சினை இருக்கிறது என நினைத்து ஸ்டாலின் அறிக்கை -மாஃபா பாண்டியராஜன்
இல்லாத பிரச்சினை இருக்கிறது என நினைத்து ஸ்டாலின் அறிக்கை -மாஃபா பாண்டியராஜன்
சென்னை ஆவடி அடுத்துள்ள திருநின்றவூரில் தமிழக அரசின் 2019 - 20 ஆண்டுக்கான கால்நடை வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டது இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு நாட்டுக்கோழிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.
தமிழக அரசு பராமரித்து வரும் எந்த புராதான சின்னங்களையும் மத்திய அரசு கேட்கவும் இல்லை நாங்கள் கொடுக்கவும் இல்லை எனக் கூறினார், புராதன கோயில்களை தமிழக அரசு உடைய அறநிலையத் துறைச் மிக சிறப்பாக பாதுகாத்து வருகிறது என்பதுதான் உண்மை அப்படி இருக்கும்போது ஏன் தேவையில்லாமல் ஒரு புரளியை கிளப்பி விட வேண்டும் என ஸ்டாலினை விமர்சித்தார் மேலும் தமிழக அரசு செய்த சாதனைகளில் இருந்து திசை திருப்பவே இல்லாத பிரச்சினை இருக்கிறது என நினைத்து ஸ்டாலின் அறிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.