பயமுறுத்தக்கூடிய செய்திகளைப் பரப்ப வேண்டாம்.. ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை..
பயமுறுத்தக்கூடிய செய்திகளைப் பரப்ப வேண்டாம்.. ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை..

செய்தித் தாள்கள், மின்னணு மற்றும் சமூக தொலைதொடர்பு ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் மிகப் பெரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று ஊடகங்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொது முடக்கம் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் என்று பொய்யான செய்தியினால் ஏற்பட்ட பீதியின் காரணமாகவே, நகரங்களில் பணிபுரியும், பெரும்பாலானவர்கள், வேறு மாநில மக்கள் வெளியேறிச் செல்வது தொடங்கியது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
செய்தித் தாள்கள், மின்னணு, சமூக தொலைத்தொடர்பு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட போலி செய்திகளினால் ஏற்பட்ட பீதியினால் மக்கள் இடம் பெயரத் தொடங்கினர்;
இத்தகைய செய்திகளினால் அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர்; இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அந்த ஆணையின் முழு விவரமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைய தொடர்பு மூலம் படிக்க முடியும்.
https://mib.gov.in/sites/default/files/OM dt.1.4.2020 along with Supreme Court Judgement copy.pdf