கொரோனா வைரஸ் அச்சத்தால் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் வெறிச்சோடியது!
கொரோனா வைரஸ் அச்சத்தால் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் வெறிச்சோடியது!

கொரோனா வைரஸ் அச்சத்தால் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் வெறிச்சோடியது. இந்தியாவிலேயே அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. இந்த மாநிலத்தில் அதிகபட்சமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 149 பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பாலும் 95% சதவீத கடைகள் அடைத்தே காணப்படுகின்றது. ஆள் நடமாட்டம் இன்றி அந்த மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் முகக் கவசங்கள் தீர்ந்து விட்டதால் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆள்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.