கொரோனா தடுப்பு பணிக்காக 2 கோடி ரூபாயை மத்திய - மாநில அரசுகளுக்கு வழங்குகிறார் பவன் கல்யாண்!
கொரோனா தடுப்பு பணிக்காக 2 கோடி ரூபாயை மத்திய - மாநில அரசுகளுக்கு வழங்குகிறார் பவன் கல்யாண்!

கொரோனா தடுப்பு பணிக்காக 2 கோடி ரூபாயை வழங்குகிறார் பவன் கல்யாண். கொரோனா பரவலை தடுக்க மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவு தரும் விதமாக பல்வேறு தரப்பினரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள். நீதிபதிகள் துவங்கி முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், ஜன சேனா தலைவருமான பவன் கல்யாண் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாயும் வழங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான கால கட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மாதிரி மற்றும் உத்வேக தலைமையால் நம்நாடு நிச்சயமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் என குறிப்பிட்டுள்ளார்.