Begin typing your search above and press return to search.
'சுய ஊரடங்கு' வெறிச்சோடிய சாலைகள், நாடு முழுக்க மக்கள் ஆதரவு!
'சுய ஊரடங்கு' வெறிச்சோடிய சாலைகள், நாடு முழுக்க மக்கள் ஆதரவு!

By :
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மார்ச் 22 (இன்று) "சுய ஊரடங்கு" பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தரும் வகையில் நாடு முழுக்க உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரு நகரங்கள் முதல் கிராமம் வரை அனைத்து சாலைகளும் வெறிச்சோடிய காணப்படுகின்றது. பல மாநில அரசுப் பேருந்துகள் இயங்காது என அறிவித்த நிலையில் சுய ஊரடங்க்கு ஆதரவு தரும் வகையில் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை, மேலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
Next Story