பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேச துரோகி பியூஷ் மானுஷ் கைது! வேலூர் ஜெயிலில் அடைப்பு!
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேச துரோகி பியூஷ் மானுஷ் கைது! வேலூர் ஜெயிலில் அடைப்பு!

சேலம் மாநகரில் சமூக செயற்பாட்டாளர் என்கிற பெயரில் போலி சுய விளம்பரங்களுக்காக அடிக்கடி ஏரி, கால்வாய் மராமத்து உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக போட்டோ எடுத்தும், சில ஊடகங்களை வாடகைக்கு அமர்த்தியும் பெயர் தேடிக் கொள்பவர் பியூஷ் மானுஷ். தான் மிகப்பெரிய பொது பணிகளை செய்து வருவதாக அவ்வப்போது ஃபேஸ் புக்கில் லைவ் வீடியோவாக பிரச்சாரம் செய்வது அவரது வழக்கம். உண்மையில் இவர் ஒரு நச்சலைட் பயங்கரவாதி. தேச விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
சென்ற ஆண்டு அரசின் நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் ஆகியவை குறித்து கேள்வி கேட்கப்போகிறேன் எனக் கூறி சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டு நாடகத்தை அரங்கேற்றினார். அவரது அலுவலகத்தில்பணி புரிந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது அந்த பெண் போலீசில் புகார் செய்து இருந்தார்.பியூஷ் மானுஷ் ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால் எங்கிருந்து பணம் வரும் என்பது தெரிவதில்லை.
அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கட்டிக் கொடுத்த மூங்கில் வீடுகளுக்கான மூங்கில்கள் எங்கிருந்து வந்தன என்பது மர்மமாக உள்ளது. பொதுவாக தொழில்கள் நிறைந்த சேலத்தில் தகவல் கோரும் உரிமை சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு பலரை மிரட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பியூஷ் மானுஷ், தான் வசித்து வரும் வீட்டுக்கு நீண்ட காலமாக வாடகை கொடுக்காமல் வீ்ட்டு உரிமையாளரை மிரட்டி வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் 53 வயதான ஆஷா குமாரி. கணவரை இழந்த இந்தப் பெண்மணியை மிரட்டி வீட்டை அபகரிக்க பியூஷ் மானுஷ் முயன்று உள்ளார். அதோடு அந்த பெண்மணியை அடித்து உதைக்கும் செய்துள்ளார். இதில் காயமடைந்த ஆஷா குமாரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக ஆஷா குமாரி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அளித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் புகார் மனுவை அனுப்பி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் பியூஷ் மானுஷ் கைது செய்தனர். அவர் மீது பொது இடத்தில் ஆபாச வார்த்தையால் திட்டுதல், காயம் ஏற்படும்படி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகி பியூஷ் மானுஷ் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.