Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் கல்விக் கொள்கை - சற்று முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!

இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் கல்விக் கொள்கை - சற்று முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 12:25 PM GMT

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

அதில், இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தவே புதிய கல்விக் கொள்கை. உயர்கல்வியில் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும்

புதிய கல்வி கொள்கை மூலம் உயர்கல்வியின் இடைநிற்றலை முற்றாகத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை மூலம், இந்தியாவின் கற்றல் கற்பித்தலில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது

புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. புதிய கல்வி கொள்கை மூலம் பாடச் சுமை மட்டுமல்ல, பொதி போன்று புத்தகப் பையை சுமந்து செல்வதும் தவிர்க்கப்படும். 21ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய கல்வி கொள்கை வடிவமைப்பு என்று பேசி வருகிறார்.

Next Story