கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்திய விளையாட்டு வீரர் - வீராங்கனையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..
கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்திய விளையாட்டு வீரர் - வீராங்கனையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் 9லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்திரவு 21 நாட்களுக்கு விதித்துள்ளது.
மேலும் ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விதித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர் - வீராங்கனை 40 பேர் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விராட் கோலி, பிவி சிந்து, யுவராஜ் சிங், ஹிமா தாஸ் உள்பட பலர் கலந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனைக் குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி அவரிடம் கேட்டபோது பிரதமர் மோடியுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டதாக கூறினார். ஆனால் ஆலோசனையில் பேசப்பட்ட விஷயங்களை பற்றி ஏதும் அவர் கூறவில்லை.