எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி - பிரதமர் மோடி!
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி - பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும், ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள். நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்."இப்போது கொரோனா வைரஸ் தாக்கினால், அதை தெரிந்து கொள்ள 14 நாட்கள் ஆகும்".
21 நாட்கள் தனிமைப்படுத்தா விட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம். ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத் தீ போல பரவும். ஒருவரை தாக்கும் கொரோனா, 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.