கொரோனா தடுப்பு மேலாண்மையில் மற்ற உலக தலைவர்களை விட முதல் இடம் பிரதமர் மோடிக்கே - ஆய்வு தகவல்!
கொரோனா தடுப்பு மேலாண்மையில் மற்ற உலக தலைவர்களை விட முதல் இடம் பிரதமர் மோடிக்கே - ஆய்வு தகவல்!

உலகெங்கும் பீதியை கிளப்பி கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு சவால் விட்டு வரும் வுஹான் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் கடுமையான முடிவுகளை எடுத்து தடுப்பு பணிகளில் வெற்றி கண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆண்டு தோறும் உலக சுகாதார விவகாரங்களை ஆய்வு செய்து வெளியிடும் மார்னிங் கன்சல்ட் என்கிற நிறுவனம் மற்ற தலைவர்களின் செயல்பாடுகளையும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பல புள்ளி விவரங்களை படங்களுடன் அளித்துள்ளது. அதில் செய்யப்பட்ட மதிப்பீடுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி வேறு எந்த உலகத் தலைவரையும் விட மிக உயர்ந்த ஒப்புதல் மதிப்பீடுகளாக 68 புள்ளிகளை பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
130 கோடி மக்கள்தொகை கொண்ட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பல மடங்கு அவர்களை விட தொற்று பரவலை கட்டுப் படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அமேலும், ஆரம்பத்தில் சிறிய அளவு பிரச்சினைகளையே கையாண்டு கொண்டிருந்த இந்தியாவுக்கு தப்லீஹி ஜமாஅத் நிகழ்ச்சி காரணமாக வழக்குகள் அதிக எண்ணிக்கையில் உயர்ந்த பின்னும், பல சோதனைகளை, வேதனைகளை தாண்டி குழப்பத்திலிருந்தும் பேரழிவிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவால் முடிந்தது என்றும், இதன் மூலம் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்ற நாட்டு தலைவர்களை காட்டிலும் அதிக பெருமை அடைகிறார் என்றும் ஏப்ரல் 14 ஆம் தேதி நிலவரப்படி, அவரது நிகர ஒப்புதல் மதிப்பீடு 68 என்றும் அந்த ஆய்வு பத்திரிக்கை கூறியுள்ளது.
இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோடிக்கு 62 ஆக இருந்தது என்றும் மெக்ஸிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், அந்தக் காலகட்டத்தில் 36 ஒப்பீட்டு எண்களை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் என்றும், அதே ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் 39 ஒப்பீட்டு எண்களை பெற்றதாகவும் ஜப்பானின் அபே 33 எங்களை பிடித்து இறுதியில் இருந்ததாகவும் மார்னிங் கன்சல்ட்டின் தரவு காட்டுகிறது.
இது குறித்து மார்னிங் கன்சல்ட்டிங் இதழ் தனது டிராக்கரில் புள்ளிவிபர தரவுகளை மேற்கோள் காட்டும் வரைபடம் ஒன்றை சேர்த்துள்ளது. இதில் பிரதமர் மோடியை குறிப்பிடும் நீல வரைபடம் வேறு எந்த உலகத் தலைவர்களுக்கும் அவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளுக்கும் மேலாக உயர்ந்திருப்பதைக் காணலாம்.