Kathir News
Begin typing your search above and press return to search.

175 ஜிகா வாட் இலக்கை நோக்கி இந்தியா! மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டம்- இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 4:49 AM GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இனி வரும் காலங்களில் நடைமுறையில் அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய அனல்மின் உற்பத்தியை படிப்படியாக குறைத்துவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, நாட்டில் வரும் 2022-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகா வாட் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story