தீவிரவாதத்தை வேருடன் பிடுங்கி எறிய வரும் மார்ச் 14, 15 ல் பிரதமர் மோடி எகிப்து பயணம்
தீவிரவாதத்தை வேருடன் பிடுங்கி எறிய வரும் மார்ச் 14, 15 ல் பிரதமர் மோடி எகிப்து பயணம்

உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் பயங்கரவாதத்துக்கு துளியும் இடம் கொடுக்காத நாடு எகிப்து. பழமைவாதத்தை தவிர்த்து , அறிவுடன் ஆன்மீகத்தை கிரகிக்கும் மக்களைக் கொண்ட நாடு எகிப்து. அண்டை நாடான சிரியாவில் பிறந்த உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை வளரவிடாமல் தடுத்ததில் எகிப்துக்கு முக்கிய பங்குண்டு.
இந்த நிலையில் உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இந்தியாவை தனது தாக்குதலுக்கான முக்கிய இடமாக கருதி இந்தியாவில் உள்ள ஏராளமான இஸ்லாமிய இளைஞர்களை மூளை சலவை செய்து ஆங்காங்கு சதிவேலைகள் செய்து வரும் நிலையில் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்புக்கு எகிப்து முக்கிய நண்பனாக உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளவும், அந்த நாட்டு தலைவர்களது அழைப்பை ஏற்றும் பிரதமர் மோடி வரும் மார்ச் 14, 15 ஆகிய இரு நாட்களில் எகிப்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு எகிப்து அதிபர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது பாதுகாப்புத்துறைத் தளவாட உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, தீவிரவாத எதிர்ப்புக்காக இணைந்து செயல்படுவது, கடற்படை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறும் இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்தே, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்குச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.