இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் உரையை 19.1 கோடி பேர் பார்த்துள்ளனர்.. டி.ஆர்.பி யில் ஐ.பி.எல் இறுதி போட்டியை முந்தியது..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் உரையை 19.1 கோடி பேர் பார்த்துள்ளனர்.. டி.ஆர்.பி யில் ஐ.பி.எல் இறுதி போட்டியை முந்தியது..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பிரதமர் மோடி அண்மையில் இரண்டு முறை, தொலைக்காட்சி மூலம் நம் நாட்டு மக்களிடம் பேசினார்.
சென்ற 20ஆம் தேதி பிரதமர் மோடி பேசிய போது 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் 24ஆம் தேதி பிரதமர் மோடி பேசிய போது நாடு முழுதும் 21 நாட்கள், ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது என அறிவித்தார்.
இதில், 20ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பேசியதை விட 24ஆம் தேதி பேசியதை தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி பேசியதை விட, 24ஆம் தேதி மோடி பேசியதை தான் அதிகம் பேர் பார்த்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சை 19.7 கோடிக்கும் மேல் 191 தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் பார்த்ததாக, பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதி போட்டியை 13.3 கோடி பேர் பார்த்துள்ளனர். அதை விட, பிரதமர் மோடி பேசியது தான் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
மேலும் ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி பிரதமர் பேசியதை, 6.5 லட்சம் பேர், 163 சேனல்களிலும் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பேசியதை 5.7 கோடி பேர், 114 சேனல்களிலும் பார்த்துள்ளனர்.