Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்

திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்

திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர்  டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2019 11:57 AM GMT


திமுகவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக பக்கம் சென்று சேர்ந்தது ஏன் ?: பா.ம.க. நிறுவனர் டாகடர் ராமதாஸ் மனம் விட்டு விளக்கம்


மத்திய அமைச்சரவையில் பாமக பங்கு பெற்றபோதேல்லாம் கஷ்டப்பட்டு வலியுறுத்தி பெறப்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுத்தாமல் முடக்கிவிட்டதாகவும், அதனால் தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதாகவும் அதனால்தான் திமுக கூட்டணிக்கு போகாமல் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்ததாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.


அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன. என்றாலும் தமிழக நலன் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்கவில்லையே என்பதால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது.


அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் அதிமுக துணையாக இருக்குமா அல்லது திமுக துணையாக இருக்குமா என யோசனை செய்து பார்த்தோம். 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி மதுரையில் அமையும் எய்ம்ஸ் போல ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது.


அதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், ரூ.50 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்த ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல


திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.


பாமக மத்திய ரயில்வே துணை அமைச்சர்கள் மூலம் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது. ஆனால், 2009-ஆம் ஆண்டு தொடர்வண்டி இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர் தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009&14 காலத்திலும் திமுக மத்திய அமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத் தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இக்காலத்தில் தொடர்வண்டித்துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்தது.


ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது, கடலூர் - நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது,


காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது. கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம்


தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News