புதிதாக "PM CARE" நிவாரண நிதி ஏன் உருவானது - காங்கிரசின் 70 வருட மோசடியை உடைக்கும் ஆதாரம் : இனியாவது வாட்ஸ்ஆப் வதந்தி தடுக்கப்படுமா.?
புதிதாக "PM CARE" நிவாரண நிதி ஏன் உருவானது - காங்கிரசின் 70 வருட மோசடியை உடைக்கும் ஆதாரம் : இனியாவது வாட்ஸ்ஆப் வதந்தி தடுக்கப்படுமா.?

எதற்கு ஏற்கனவே உள்ள வெளிப்படைத் தன்மைக்கொண்ட "பிரதம மந்திரி நிவாரண நிதி" யை விட்டுவிட்டு புதிதாக "PM CARE" என்ற ஒன்றில் கொரோனா நிதி உதவி செய்யுமாறு கோருகின்றனர்? என்று கூறி, ஒரு சில பொய்யான தகவல்களோடு வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கில் ஒரு செய்தி உலா வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அரசியல் ஆர்வலர் சந்திரமௌலி.
முதலில் ஏற்கனவே உள்ள வெளிப்படைத்தன்மை கொண்ட "பிரதம மந்திரி நிவாரண நிதி"-யைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா!
நமது முதல் பிரதமர் நேரு அவர்களால் முன்மொழியப்பட்டுத் துவக்கப்பட்டதே "பிரதம மந்திரி நிவாரண நிதி". அதன் குழுவில் யார் யார் இருக்கலாம் என்றும் அவரே பரிந்துரைத்துள்ளார். அதன் நகல் கீழே:
இதை நீங்கள் இன்றும் அரசாங்க இணையதளத்தில் காணலாம்.
இரண்டாவது வரியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதன் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று உள்ளது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களில் பெரும்பாலான காலம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. இன்று வரை ஏன் இவ்வாறு உள்ளது என்றோ அல்லது இது மாற்றப் படவேண்டிய அவசியம் குறித்தோ "வெளிப்படைத்தன்மை" கொண்ட எந்த காங்கிரஸ் பிரதமரோ அல்லது அரசாங்கக் குழுவோ ஏதாவது செய்ததா? ராஜீவ் காந்தி காலத்தில் இதில் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பல்வேறு குளறுபடிகள் நிறைந்த அதற்கு பதிலாகவே, புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.pmnrf-congress-leader-trustee
இதுவே PM CARES என்ற பெயரில் புதிய நிதியைத் துவக்க முக்கிய காரணம்.
அடுத்து இதைப் பற்றிய அதிகாரப் பூர்வ தகவல் எந்த இணையதளத்திலும் கொடுக்கப்படவில்லை என்பது இன்னொரு வதந்தி. இதோ அரசாங்கத் தளம்: About PM CARES Fund
மேலும், இந்தத் தளத்தில் இந்தக் குழுவில் யார் யார் இருக்கலாம் என்பதன் விவரம்:
மேலும் இதைப் பற்றிப் பொதுவாகப் பரப்பப்படும் ஒரு வதந்தி, இந்த நிதிக்கு வருமான வரி கட்டவேண்டும் என்பது. இதுவும் பொய். இந்த நிதி செலுத்துவதற்கான பக்கத்தில் இதற்கு 80G வரிவிலக்கு உண்டு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.