Begin typing your search above and press return to search.
பிரதமர் மோடியை முகநூலில் அவமதித்து வந்த கல்லூரி பேராசிரியர் கைது! மாணவர்களே போட்டுக் கொடுத்தனர்
பிரதமர் மோடியை முகநூலில் அவமதித்து வந்த கல்லூரி பேராசிரியர் கைது! மாணவர்களே போட்டுக் கொடுத்தனர்

By :
அசாம் மாநிலம் சச்சார் மாவட்டம் சில்சார் நகரைச் சேர்ந்தவர் சவுரதீப் செங்குப்தா. இவர் அப்பகுதியில் உள்ள குருசரண் கல்லூரியில் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கலவரம் தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இதுதொடர்பாக அவரிடம் படிக்கும் மாணவர்களே போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து சவுரதீப் செங்குப்தாவை நேற்று கைது செய்தனர். மத உணர்வுகளை தூண்டுதல், இரு பிரிவினர் இடையே பகையை உருவாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.
Next Story