விரட்டி விரட்டி வெளுக்கும் காவல்துறையினர்..
விரட்டி விரட்டி வெளுக்கும் காவல்துறையினர்..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.
மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடையை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களை போலீஸார் நிற்க வைத்து அடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சில பகுதிகளில் வாகனங்களின் காற்றை பிடுங்கியும், ரோட்டில் தோப்புக்கரனம் போட வைத்தும் தண்டனைகளை வழங்கியுள்ளனர்.
கேரளாவிலும் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை உணராமல், மக்கள் விடுமுறை காலங்களை போல் ஜாலியாக வெளியில் சுற்றித்திரிகிறார்கள். அவ்வாறு மக்கள் சுற்றித்திரியக்கூடாது. அப்படி சுற்றித்திரிபவர்கள் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு, பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.
தங்களது உயிரையும், தங்களுடைய குடும்பத்தினர் உயிரையும் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த வைரஸ் நமக்கு இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். உங்களிடம் இந்த நோய் இல்லாவிட்டாலும் உங்களுக்குள் வைரஸ் இருக்கலாம். உங்கள் மூலமாக பிறருக்கு பரவ மிக அதிக வாய்ப்புண்டு. எனவே என்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டாம். நீங்கள் எதை தொட்டாலும் வைரஸ் இருக்க முடியும். நீங்கள் யாரை சந்தித்தாலும் அவருக்குள் வைரஸ் இருக்க முடியும். அதனால் வரும் காலம் மிகவும் கவனமாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டிய காலம்.
மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இதில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். சிலர் அதை மீறுகிறார்கள்.
மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் வைரஸ் பரவுவதை தடுத்து சாதிக்க முடியும்