கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு : இயற்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டும் நாசாவின் படங்கள்
கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு : இயற்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டும் நாசாவின் படங்கள்

கொரோனா பரவலை கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் இப்போது ஊரடங்கில் உள்ளது. புகையை கக்கும் தொழிற்சாலைகளும், மோட்டார் வாகனங்களும் பெருமளவில் இயக்கப்படாத இந்த கால கட்டத்தில் இயற்கை சூழலில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக நிபுணர்களால் கூறப்படுகின்றது.
நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக காட்டுவதாக நாசா நிபுணர்கள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் இப்போது ஊரடங்கில் உள்ளது. புகையை கக்கும் தொழிற்சாலைகளும், மோட்டார் வாகனங்களும் பெருமளவில் இயக்கப்படாத இந்த கால கட்டத்தில் இயற்கை சூழலில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக நிபுணர்களால் கூறப்படுகின்றது.
நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக காட்டுவதாக நாசா நிபுணர்கள் கூறியுள்ளனர்.