Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் இலக்கிய திருவிழா! செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடக்கிறது! #PLF2019

புதுச்சேரியில் இலக்கிய திருவிழா! செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடக்கிறது! #PLF2019

புதுச்சேரியில் இலக்கிய திருவிழா! செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடக்கிறது! #PLF2019

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Sep 2019 3:10 AM GMT


“Pondy Lit Fest” அமைப்பு சார்பில் புதுச்சேரியில் இலக்கிய திருவிழா, கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி இந்த விழா தொடங்கி நடந்தது.


இந்த இலக்கிய திருவிழா, இடதுசாரி சிந்தனையாளர்களின் பித்தலாட்ட முகத்திரையை கிழித்து விடும் என்று பீதியடைந்த இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட கழகத்தினர் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி இலக்கிய திருவிழா (Pondy Lit Fest-2018) கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது.


இந்த ஆண்டின் இலக்கிய திருவிழா (Pondy Lit Fest-2019) வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை (27.09.2019 முதல் 29.09.2019) 3 நாட்கள் நடக்கின்றன. புதுச்சேரி செண்பகா கண்வென்சனல் சென்டரில் (Shenbaga Convention Centre) இந்த இலக்கிய திருவிழா நடக்கிறது.


மூத்த பத்திரிகையாளர் கஞ்சன் குப்தா மற்றும் ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழக பேராசியர் ஆனந்த் ரங்கநாதன் ஆகியோர், புதுச்சேரி இலக்கிய விழாவின் பொறுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.


ஸ்ரீ அரவிந்தரால் உருவாக்கப்பட்ட “பாரத சக்தி” என்பதை மையமாக கொண்டு, புதுச்சேரி இலக்கிய விழா நடத்தப்படுகிறது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.


அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரபல எழுத்தாளர் கஞ்சன் குப்தா ஆகியோர் அமர்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். நேருக்கு நேர் உரையாடலில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான், பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, ஷியாம பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி கழக இயக்குனர் டாக்டர் அனிர்பான் கங்குலி ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர்.


இவர்களைத்தவிர, ராஜ்ய சபா எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா, மத்திய அரசின் பொருளாதர ஆலோசகர் சஞ்ஜீவ் சான்யால், ஒடிசா முன்னாள் எம்.பி ஜாய் பாண்டா, ஐக்கிய ஜனதா தள தலைவர் பவன் வர்மா, சுர்ஜித் பலாலா, ஆதித்திய ராய் கவுல், பா.ஜ.க தமிழக இளைஞர் அணி துணைத் தலைவர் SG சூர்யா உள்பட பல்வேறு பிரபலங்கள் புதுச்சேரி இலக்கிய விழாவில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.


அகில இந்திய அளவில் பிரபலமான சிந்தனையாளர்கள் உள்பட பலர், இந்த இலக்கிய விழாவில் கலந்துக் கொள்ளும் அனைவரின் பட்டியலும் இலக்கிய விழா இணையதளத்தில் காணலாம்.


இந்த விழாவின் ஊடக பங்களிப்பாளராக அர்னாப் கோஷ்வாமியின் ரிபளிக் தொலைக்காட்சி செயல்படுகிறது.


இந்த இலக்கிய திருவிழாவிற்கான அனுமதி இலவம். இருந்தாலும் குறைவான இருக்கைகளே உள்ளதால், இலக்கிய திருவிழாவிற்கான இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்வது அவசியம். இதன் மூலம் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News