Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன், சுட சுட செய்திகள்.!

இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன், சுட சுட செய்திகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 10:33 AM GMT

எவ்வளவு பெரிய நடிகருக்கும் இவரது படத்தில் ஒரு காட்சியிலாவது தோன்றி விட மாட்டோமோ என்ற ஏக்கத்தை உருவாக்கியிருப்பவர் இயக்குநர் மணிரத்னம். ஆனால் அவருக்கே அவரது கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க பல வருடங்கள் ஆனது. ஒவ்வொரு முறையும் அவர் 'பொன்னியின் செல்வன்' படத்தினை துவங்க முயற்சிக்கும் போதெல்லாம் தடங்கலையே சந்திக்க நேர்ந்தது.

தற்போது அதையெல்லாம் கடந்து லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். விக்ரம், 'ஜெயம்' ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி சுஹாசினினியுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடிய மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர் இரண்டு பாகங்களாகப் படம் உருவாகவிருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் பாகம் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

Next Story