இந்தியா கிரிக்கெட் வீராங்கனைகளால் மிக பெருமை! - விராட் கோலி!
இந்தியா கிரிக்கெட் வீராங்கனைகளால் மிக பெருமை! - விராட் கோலி!

பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது இந்தியா பெண்கள் அணி. இதற்கு இந்தியா ஆண்கள் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள். நாங்கள் உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். மேலும் இறுதி போட்டியில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.
இந்தியா முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் ட்விட்டர் பக்கத்தில் கூறியது: அரை இறுதி போட்டியை பார்ப்பதை அனைவரும் விரும்பிருப்பார்கள். ஆனால் இந்திர தேவனுக்கு முன்னால் யார் வெல்ல முடியும்.சோதனையின் முடிவு நல்லது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளையும் வென்றதற்கான வெகுமதி வாழ்த்துக்கள். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்' என்றார்.
விராட் கோலியின் மனைவி மற்றும் ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா ட்விட்டர் பக்கத்தில் கூறியது: நாங்கள் அனைவரும் ஒரு சிறந்த போட்டியை காண ஆர்வமாக இருந்தோம். எங்கள் பெண்கள் நீல நிறத்தில் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்பியபோது மழை பெய்தது ! ஆயினும்கூட, இதை நாங்கள் இரு கைகளாலும் எடுத்துக்கொள்வோம். மார்ச் 8 ஆம் தேதி காத்திருக்க முடியாது என பதிவு செய்து இருந்தார்.