Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேசிய மாணவர் படை மாணவர்களை களத்தில் இறக்கிய போலீசார்...

புதுச்சேரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேசிய மாணவர் படை மாணவர்களை களத்தில் இறக்கிய போலீசார்...

புதுச்சேரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க  தேசிய மாணவர் படை மாணவர்களை களத்தில் இறக்கிய போலீசார்...

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 11:24 AM GMT

புதுச்சேரியில் 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதியோர்கள், விதைகள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு மாதந்தோறும் அரசு கொடுக்கும் உதவித்தொகை மற்றும் அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000 உள்ளிட்டவை தற்போது அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதை பெறுவதற்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் ஏராளமான முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில் வங்கிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கு, இது நாள் வரை போலீசார் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறைக்கு உதவியாக நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்கள் அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் முதியவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story