புதுச்சேரியில் பொது இடத்தில் சிகரெட் பிடித்ததை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்தி குத்து - பரபரப்பு!
புதுச்சேரியில் பொது இடத்தில் சிகரெட் பிடித்ததை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்தி குத்து - பரபரப்பு!

புதுச்சேரி அருகே உள்ள திருக்கானூர் பகுதியில் உள்ள கடை வீதியில் திருஞானம்(60) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் பெட்டிக்கடை அருகே சிகிரெட் பிடித்துள்ளனர், அப்போது பெட்டிக் கடை உரிமையாளர் திருஞானம் அப்பகுதியில் சீக்ரெட் பிடிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்களில் ஒருவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திருஞானத்தை வெட்ட முயன்றார். அதனை அவர் தடுக்க முயன்ற போது, அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட அலறினார். இதனையடுத்து, அருகில் இருந்த மற்றொரு கடைக்காரர் உமாபதி என்பவர் வந்து தடுக்க முயன்றபோது அவரை அந்த மர்ம இளைஞர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தால் அருகில் இருந்து பொதுமக்கள் கூடவே, அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்றனர். வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருக்கானூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.