Top
Kathir News
Begin typing your search above and press return to search.

புல்வாமா தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்தாரா பிரதமர் மோடி? வெட்கமின்றி ஆதி முதல் அந்தம் வரை போலி செய்திகளை பரப்பும் காங்கிரசும், ராகுல் காந்தியும்!

புல்வாமா தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்தாரா பிரதமர் மோடி? வெட்கமின்றி ஆதி முதல் அந்தம் வரை போலி செய்திகளை பரப்பும் காங்கிரசும், ராகுல் காந்தியும்!

புல்வாமா தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்தாரா பிரதமர் மோடி? வெட்கமின்றி ஆதி முதல் அந்தம் வரை போலி செய்திகளை பரப்பும் காங்கிரசும், ராகுல் காந்தியும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 5:27 AM GMT


காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி, துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறி வைத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.


இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது, நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.


இந்த தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு தவறான, பொய்யான ஒரு பேட்டியை அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது நேரம் பிற்பகல் 3.10 மணி. இதையொட்டி காங்கிரஸ் கட்சி 5.15 மணிக்கு தனது கருத்தை தெரிவித்தது. இது பற்றி, பிரதமருக்கும் தெரியும். தன்னை தேசியவாதி என்று கூறிக்கொள்கிற பிரதமர், டிஸ்கவரி சேனலில் சுய விளம்பரம் செய்து கொள்வதற்காக ராம்நகர் கார்பெட் தேசிய பூங்காவில் ஆவண படப்பிடிப்பில் தொடர்ந்து இருந்தார். படப்பிடிப்புக்கு வந்த கேமரா குழுவினருடன் அவர் உல்லாசமாக படகு சவாரியை தொடர்ந்து இருக்கிறார். மாலை 7 மணிக்கு பிரதமர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் டீயும், சமோசாவும் சாப்பிட்டுள்ளார்.


ஒரு பக்கம், தாக்குதலில் பலியான வீரர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் பிரதமர் தனது கொள்கை பிரச்சார விளம்பர படப்பிடிப்பில் இருந்தார். இத்தகைய நடத்தையை நாட்டின் பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா? படப்பிடிப்பில் இருந்ததற்கு பதிலாக, உடனடியாக பிரதமர் ராணுவ துறைக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் பல பொய்களை அடுக்கி கூறினார் . ராகுல் காந்தியும் இதேபோல பொய்யான பிரச்சாரத்தை பிரதமர் மோடி மீது கூறி வருகிறார். இதை பல ஊடகங்கள் பெரிது படுத்தி வருகின்றன.


இந்த நிலையில்,


இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் பிரதமர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் அரசுத்தரப்பில் இருந்து அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளனர்.


அவர்கள் கூறியுள்ளதாவது


1. புல்வாமா தாக்குதலுக்கு பின்பு 6:30 மணியளவில் நடைபெற்ற கார்பெட் பூங்கா படப்பிடிப்பில் பிரதமர் மோடி இல்லை.


மேலும் தாக்குதல் நடைபெற்ற தினத்தில் அவருடைய அன்றைய தின திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டோம். அவை:


2. பிரதமர் சுய விளம்பர படம் எதிலும் நடிக்கவில்லை. சுற்றுலா முன்னேற்றம் மற்றும் பருவகால மாற்றம் தொடர்பான அரசு விழிப்புணர்வு படம் ஒன்றில்தான் அவர் பங்கேற்றார். மாலை நான்கு மணி அளவில் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதுமே அதைப்பற்றி விசாரித்து சில உத்தரவுகளை பிறப்பித்தார். உடனடியாக பூங்காவில் இருந்து ருத்ராபூர் பொது கூட்டத்துக்கு கிளம்பி விட்டார்.


3. 3:10 க்கு தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தனது அறிக்கையில் தாக்குதல் 3:33 க்கு நடைபெற்றது என தவறாக பொய்யை கூறியுள்ளது.


4. இந்த இருபைத்தைந்து நிமிட தவறான இடைவெளியைக் கொண்டே ஒரு பொய்யான பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது தெரிகிறது.


5. விழிப்புணர்வு படத்துக்காக மோடி படகு சவாரி மேற்கொண்டநேரம் தாக்குதலுக்கு முன்பே மதியம் 1:52 மணிக்கு நடைபெற்றது. இந்த படத்தை 1:52 மணிக்கே பா.ஜ.கவை சார்ந்த சமூக வலைதள பிரச்சார ஒருங்கிணைப்பாளர் விஷவகேது என்பவர் டுவீட் செய்துள்ளார். இதுவே சாட்சியாகும்.


6. அதேபோல பிரதமர் மோடி தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டப் பிறகு 6:45 மணிக்கு டீ, சமோசா எதையும் சாப்பிடவில்லை. அவர் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தொவல் மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தார்.


7. காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியவாறு கேபினட் மீட்டிங் கூட்டப்படாமல் இல்லை. அதற்கு காரணம் பிரதமர் மோடி அப்போது டில்லியில் இல்லை. உத்தராகாண்ட் மாநிலம் ராம்பூரில் இருந்ததால் அடுத்து ஆக வேண்டிய காரியங்களை தொலைபேசி மூலமே கூட்டம் போட்டு உத்தரவிட்டார்.


8. இதனால் பிரதமர் மோடியால் ருத்ராபூர் கூட்டத்துக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அவருக்கு செல்லவும் பிடிக்கவில்லை, என்றாலும் மோடியை பார்க்கவும், தாக்குதலுக்குப் பிறகு அவருடைய பேச்சைக் கேட்கவும் பிரம்மாண்ட கூட்டம் எதிர்பார்த்ததைவிட பெரிதாக கூடி இருந்தது. கூட்டத்தினரை ஏமாற்ற விரும்பாத மோடி துக்கத்திலும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்.


9. கூட்டம் முடிந்து டெல்லி புறப்படுவதற்கு முன்பு தாக்குதல் சம்மந்தமாக பாதுகாப்பு துறையினருடன் உடனடியாக பேசவிருந்ததால் ராம்நகர் விருந்தினர் இல்லத்தில் தங்கினார். அப்போது கூட அவர் எதுவும் சாப்பிடவில்லை. எனவே காங்கிரசார் கூறியது அனைத்தும் தவறான குற்றச்சாட்டுகளாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Input Credits - Times of India Fact Checker.


Next Story