Kathir News
Begin typing your search above and press return to search.

“அவகாசம் முடிந்துவிட்டது, பாகிஸ்தானுடன் இனிமேல் பேச்சு இல்லை, வீச்சுதான்” !: பிரதமர் மோடி திட்டவட்டம்

“அவகாசம் முடிந்துவிட்டது, பாகிஸ்தானுடன் இனிமேல் பேச்சு இல்லை, வீச்சுதான்” !: பிரதமர் மோடி திட்டவட்டம்

“அவகாசம் முடிந்துவிட்டது, பாகிஸ்தானுடன் இனிமேல் பேச்சு இல்லை, வீச்சுதான்” !: பிரதமர் மோடி திட்டவட்டம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2019 1:37 PM GMT


பாகிஸ்தானுக்கு
இதுவரை அளிக்கப்பட்டு வந்த அவகாசம் முடிவுக்கு வந்து விட்டது என்றும், இது புல்வாமா தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக பிரதமர்
தெரிவித்தார். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, இது செயலில் இறங்குவதற்கான
நேரம் எனவும் குறிப்பிட்டார்.


இந்தியா
வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரியுடன் இணைந்து டெல்லியில் பிரதமர்
மோடி செய்தியாளர்களிடம் பேசினார். 2022 ஆம் ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவில்
நடைபெறுவதாக அறிவித்த அர்ஜென்டினா அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.




உலக அமைதிக்கும், உறுதிக்கும், பயங்கரவாதம் பெரும்
அச்சுறுத்தலாக இருப்பதை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த அவகாசம் முடிவுக்கு வந்து விட்டது என்றும், இது புல்வாமா தாக்குதல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாகவும்
பிரதமர் தெரிவித்தார். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, இது செயலில்
இறங்குவதற்கான நேரம் எனக் குறிப்பிட்ட பிரதமர், ஒட்டு மொத்த உலகமும்
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


பயங்கரவாதத்திற்கு
எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும், அதனை ஆதரிப்பதுதான்
என பிரதமர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அர்ஜென்டினா அதிபர், எந்தவிதமான பயங்கரவாத
தாக்குதலாக இருந்தாலும் அதனைக் கண்டிப்பதாகக் கூறினார். மனித குலத்தைக் காக்க
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர்
கேட்டுக் கொண்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News