வன்முறை சம்பவத்தில் துண்டான சப்-இன்ஸ்பெக்டரின் கையை 7 மணிநேரத்தில் மீண்டும் பொருத்தி இயக்கம், பஞ்சாப் மருத்துவர்கள் அபார சாதனை
வன்முறை சம்பவத்தில் துண்டான சப்-இன்ஸ்பெக்டரின் கையை 7 மணிநேரத்தில் மீண்டும் பொருத்தி இயக்கம், பஞ்சாப் மருத்துவர்கள் அபார சாதனை

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பாரம்பரிய உடைகள் மற்றும் ஆயுதங்களுடன் நேற்று காரில் வந்த வந்த 5 பேர் கொண்ட முரட்டு சீக்கிய கும்பல் ஊரடங்கு நேரத்தில் தங்களை வழி மறித்த போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு விட்டு தப்பிச்சென்றனர். இதில் ஒரு போலீசுக்கு தலையில் பலத்த காயமும், இன்னொரு 50 வயதான சப் இன்ஸ்பெக்டரின் இடது கை மணிக்கட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இருவரும் உடனடியாக அருகில் உள்ள பி.ஜி.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் குழு அரிவாளால் வெட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மணிக்கட்டு பகுதியை முழுவதும் எடுத்துவிட்டு பிறகு ரேடியல் மற்றும் உல்நார் தமனிகள், வேனா காமிட்டான்ட்கள் மற்றும் கூடுதல் டார்சல் நரம்புகள் உதவியுடன் இரத்த வேர்செல்களுடன் மீண்டும் இணைத்து உடனடியாக ஒட்டவைத்தனர்.
காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை முடிய ஏழரை மணி நேரம் ஆனதாகவும், மணிக்கட்டில் உள்ள அனைத்து நரம்புகளையும் கே- கம்பிகள் மூலம் நுண்ணிய வகையில் இணைக்க இவ்வளவு நேரம் பிடித்தது என்றும், இதுவும் ஒரு வகை பிளாஸ்டிக் சர்ஜரிதான் என்றும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
அறுவை சிகிச்சையின் முடிவில் கையில் இரத்த சுழற்சி நன்றாக உள்ளதாகவும், கை மீண்டும் முந்தைய உஷ்ண நிலையை பெற்றுள்ளதால் ரணங்கள் ஆறிய பிறகு முன்புபோல கை இயங்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்களின் இந்த உடனடி உதவிக்கு பஞ்சாப் மாநில போலீசார் மனமார நன்றி தெரிவித்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் டி.ஜி.பி தினகர் குப்தா கூறினார்.
https://swarajyamag.com/insta/punjab-after-8-hours-of-surgery-patiala-police-officers-severed