வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 91,000 பேர் - மத்திய அரசிடம் அவசர உதவியை எதிர்நோக்கும் பஞ்சாப்!
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 91,000 பேர் - மத்திய அரசிடம் அவசர உதவியை எதிர்நோக்கும் பஞ்சாப்!

வெளிநாடுகளில் இருந்து 91,000 பேர் பஞ்சாப் திரும்பியுள்ள நிலையில் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகளை அமைக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளது பஞ்சாப் மாநில அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியதில் இருந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் பஞ்சாபியர்கள் இந்தியா திரும்ப தொடங்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 91,000 பேர் பஞ்சாப் திரும்பியுள்ளனர்
தற்போது இவர்கள் அனைவரையும் கொரோனா மையத்தில் வைத்து கண்காணிக்க வேண்டிய நெருக்கடியை பஞ்சாப் அரசு எதிர்கொண்டிருக்கிறது. இதனால் இத்தகைய கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகள் அமைக்க ரூ150 கோடி நிதி உதவி செய்ய மத்திய அரசிடம் பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில அமைச்சர் பி.எஸ். சித்து கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான பேருக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை 5 எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்த உள்ளனர் என்றார்.
சித்து தனது கடிதத்தில், "நாங்கள் ஐ.சி.யுக்கள் (தீவிர சிகிச்சை பிரிவுகள்), தனிமைப்படுத்தும் வார்டுகள் போன்றவற்றை அமைத்து வருகிறோம். எங்களுக்கு கூடுதல் மனிதவளம், நிபுணர்கள், தீவிரவாதிகள், மயக்க மருந்து நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை. எங்களுக்கு மருந்துகள், தளவாடங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பல பொருட்களும் தேவை என்று கூறியுள்ளார்."