கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹10 லட்சம் உதவி - பி.வி சிந்து!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹10 லட்சம் உதவி - பி.வி சிந்து!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 700க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கையாக ஏப்ரல்14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
மேலும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் நிவாரண நிதிக்கு உதவி செய்து வருகிறார்கள்.
இதற்கு உதவும் வகையில் இந்தியா பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதவர்களிடம் நிவாரண நிதிக்கு தலா ₹5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
I hereby donate an amount of Rs 5,00,000/- each (Rs five lakhs ) towards the "Chief Ministers Relief Fund"
— Pvsindhu (@Pvsindhu1) March 26, 2020
for the States of Telangana and Andhra Pradesh to fight against COVID-19. @TelanganaCMO @AndhraPradeshCM
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பி.வி.சிந்து.