Kathir News
Begin typing your search above and press return to search.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான CAG அறிக்கை மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலம்! #RafaleCAGReport

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான CAG அறிக்கை மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலம்! #RafaleCAGReport

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான CAG அறிக்கை மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலம்! #RafaleCAGReport

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2019 3:40 AM GMT


இந்திய விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசால்ட் நிறுவனத்துடன் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடைபெற்றது என்று காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய கணக்குத் தணிக்கை குழு தாக்கல் செய்தது.


141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பாதுகாப்பு காரணங்களுகாக போர் விமானங்கள் விலை குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையில், "காங்கிரஸ் அரசில் போடப்பட்ட 126 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை, 2015-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப மதிப்பீடு நிலையின்போது ரத்து செய்தது. ரபேல் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அம்சங்கள் 17% விலை குறைவானவை. பறக்கும் விமானத்தின் விலை 2007-ல் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு சமமானதுதான். ஒட்டுமொத்த ரபேல் ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட 2.86% மலிவானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ரபேல் ஒப்பந்தம் தொடர்பான CAG அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்க போகிறது என கேட்டுள்ளார். ரபேல் விமானங்களை வாங்க 2007-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் குறைந்த விலை, வேகமாக விநியோகம், சிறந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள் இருக்கின்றன என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News