கொரோனா நிவாரண நிதிக்கு 3 கோடி, ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
கொரோனா நிவாரண நிதிக்கு 3 கோடி, ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தங்களால் முடிந்த நிதியை வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தன.
அதன்படி தொழிலதிபர்கள், நடிகர்கள், முக்கியப் பிரமுகர்கள், பல நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனது அடுத்த படத்திற்காக பெற்றுள்ள முன் தொகையான 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம், நடனக்கலைஞர் சங்கத்திற்கு 50 லட்சம், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 லட்சம், தான் பிறந்த ஊர் ராயபுரம் மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் என மொத்தம் 3 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/offl_Lawrence/status/1248212155033321472?s=19