ரத்து செய்யப்பட்ட பயணசீட்டின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் - ரயில்வே துறை..
ரத்து செய்யப்பட்ட பயணசீட்டின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் - ரயில்வே துறை..

மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை உள்ள நாட்களில் ரயில் பயணசீட்டை எடுத்தவர்களுக்கு முழு பணத்தையும் திருப்பி கொடுக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே முன்பதிவு மையத்தில் பெற்ற பயணச்சீட்டை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால், டிக்கெட் வைப்பு ரசீது படிவத்தை நிரப்பிக் விவரங்களை தலைமை வணிக மேலாளர் அல்லது மண்டலத் தலைமை அதிகாரிடம் கொடுத்து ஜூன் 21ஆம் தேதி வரை மீதி பணத்தை வாங்கிக்கொள்ளலாம்.
மார்ச் 27ஆம் தேதி பின் ரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் முழு பணத்தை திருப்பிக் கொடுக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால் மீதி பணத்தை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் மற்றும் மார்ச் 27ஆம் தேதிக்கு பின் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு முழு பணத்தை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
https://twitter.com/RailMinIndia/status/1243869608001458176
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு டிக்கெட் கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்தவர்கள், 'கவுன்டர்'கள் மூடப்பட்டுள்ளதால், நேரில் செல்ல வேண்டாம். ஏப்15ஆம் தேதியிலிருந்து கவுன்டர்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம்.