பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே தொழிலாளர்கள்.. என்ன செய்தனர் நாம் கொண்டாடிய நடிகர், நடிகைகள்..
பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே தொழிலாளர்கள்.. என்ன செய்தனர் நாம் கொண்டாடிய நடிகர், நடிகைகள்..

ரயில்வே துறையில் வேலை பார்க்கும் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு தருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றறை பரவாமல் தடுக்க, மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. பிரதமர் மோடியும் நம் நாட்டு மக்களிடம் தங்களால் முடிந்த நிதியை வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார். இதை அடுத்து பல தரப்பினரும், பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் ரயில்வே துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை, பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு தருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் நானும் இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை தருவதாக தெரிவித்தார்.