கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் செய்து வருகின்றது, இந்நிலையில் "தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு" தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் நடிகர் ரஜினிகாந்த், ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை! அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்'' என தெரிவித்துள்ளார்.