Kathir News
Begin typing your search above and press return to search.

கோடி கோடியாக நிதி பெறும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை செய்யும் 'நற்பணிகள்' இது தான் - இதிலும் முறைகேடுகளா? #RajivGandhiFoundation

கோடி கோடியாக நிதி பெறும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை செய்யும் 'நற்பணிகள்' இது தான் - இதிலும் முறைகேடுகளா? #RajivGandhiFoundation

கோடி கோடியாக நிதி பெறும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை செய்யும் நற்பணிகள் இது தான் - இதிலும் முறைகேடுகளா? #RajivGandhiFoundation

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 2:27 AM GMT

கடந்த இரண்டு நாட்களில் ராஜிவ் காந்தி அறக்கட்டளை குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக, ராஜீவ் காந்தி அறக்கட்டளை தொடர்ந்து பிரதமர்களின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) நிதியைப் பெற்றுள்ளது. சீனா முதல் அயர்லாந்து, லக்சம்பர்க் வரை உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரசாங்கங்களிலிருந்தும், பல்வேறு மத்திய அமைச்சகங்களிலிருந்தும், ரிலையன்ஸ் முதல் TVS , GVK வரையிலான தொழில்களிடமிருந்தும், SBI முதல் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வரையிலான வங்கிகளில் இருந்தும், தனியார் நபர்களிடமிருந்து, தனியார் அறக்கட்டளைகளிலிருந்து நிதி பெற்றுள்ளனர். எங்கிருந்து அவர்கள் நிதி வாங்கவில்லை என்பதைத் தான் தேட வேண்டும்.

அத்தகைய ஒரு பெரிய நெட்வொர்க் மற்றும் நிதியுதவியுடன், இந்த ஆண்டுகளில் அவர்கள் செய்த பணிகள் என்ன என்று நாம் பார்த்தோமானால், அவர்களின் இணையதளத்தில் நிறைய சொற்கள் மற்றும் சிறிய எண்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சுருக்கமான பதிவு கீழே.

திட்டம் 1: INTERACT உதவித்தொகை

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மோதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். உண்மை என்னவென்றால், 1993 ஆம் ஆண்டு முதல், 11 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், மொத்தம் 2,115 குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளி மட்டத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது, இவர்களில் 134 பேர் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி படிப்புகளைத் தொடர்ந்தனர். இத்தனை நன்கொடையாளர்கள் தங்கள் வசம் இருந்தும் 1993 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 80 மாணவர்களுக்கு மட்டுமே RGF ஆதரவளித்து வருகிறது.!

திட்டம் 2: ராஜீவ் காந்தி வாய்ப்புகளைப் பெறுவதற்கான திட்டம்

உடல் ரீதியான சவால் அடைந்த இளைஞர்களுக்கு "சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை வழங்குவது" இந்த திட்டத்தின் நோக்கம். 1992 ஆம் ஆண்டு முதல், 25 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில், இதுபோன்ற 2900 வாகனங்கள் வழங்கப்பட்டன என்பது கணக்கு. இது வருடத்திற்கு சுமார் 100 ஆகும். இத்தனை நன்கொடையாளர்கள் தங்கள் வசம் இருந்தும் 1992 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 100 பேருக்கு மட்டுமே வாகனங்கள் வழங்கி வருகிறது RGF.!

திட்டம் 3: ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ் உதவித்தொகை

இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் மற்றொரு அறக்கட்டளையுடன் கூட்டு சேர்ந்தனர். கேம்பிரிட்ஜ் காமன்வெல்த் அறக்கட்டளை. 1994 முதல் அவர்கள் என்ன செய்தார்கள்? இந்தியாவுக்கு வருகை தர இங்கிலாந்து பல்கலைக்கழகங்களின் 140 மாணவர்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கி கொடுத்துள்ளனர். (ஆடம்பரமான பெயர் - "பயண உதவித்தொகை")! பின்னர் அவர்கள் 60 இந்திய மாணவர்களுக்கு B.A., (ஹானர்ஸ்) இல் 2 வது பட்டம் பெற நிதியளித்தனர். மேலும் 2014 முதல்: இந்தியாவில் இருந்து கேம்பிரிட்ஜுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 Phd மாணவர்களுக்கு முழு உதவித்தொகை வழங்கினர். அது அருமை என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த செலவு மூன்று வெவ்வேறு அறக்கட்டளைகளால் பகிரப்படுகிறது! செலவு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

திட்டம் 4: இயற்கை வள மேலாண்மை

அவர்களின் வலைத்தளத்தின்படி, இது 2001 இல் நிறுவப்பட்டது. பின்னர் அவர்கள் உடனடியாக 2011 ஆம் ஆண்டில் செய்ததை நோக்கிச் செல்கிறார்கள். ஆகவே, இந்த திட்டம் 2011 வரை எதுவும் செய்யவில்லை என்று மட்டுமே அர்த்தம் (ஆம், 10 முழு ஆண்டுகள்! நன்கொடையாளர்கள் இது பற்றி எப்படி உணருகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது). ராஜஸ்தான்-மத்தியப் பிரதேச எல்லையில் பணிபுரியும் "கிராம் கவுரவ் சன்ஸ்தான்" தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 3 நன்கொடையாளர்களில் ஒருவராக அவர்கள் இருக்க முடிவு செய்கிறார்கள். 1760 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அவர்களின் தளம் கூறுகிறது. ஆனால் இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த தாக்கமா அல்லது RGF நிதியுதவியால் மட்டுமே பலனடைந்த குடும்பங்களா என்பது குறித்து அவர்கள் எந்த தெளிவும் கொடுக்கவில்லை.

திட்டம் 5: பாரம்பரியம் - காப்பகங்கள் மற்றும் தொகுப்பு

"ஸ்ரீ ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் வேலை குறித்த காப்பகங்களை" பராமரிப்பதே இதன் நோக்கம். அவரது புகைப்படங்கள், வீடியோக்கள், உரைகள் அனைத்தும் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. இதை அவர்கள் தங்கள் சொந்தக் காசில் செய்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக, அடிப்படையில் ஒரு குடும்பத் திட்டத்தைச் செய்ய அவர்கள் அரசாங்கப் பணத்தைப் பெறுகிறார்கள்!

திட்டம் 6: பள்ளிகள் திட்டம்

"பள்ளிகள் திட்டம்" என்ற அவர்களின் இணைப்பைக் கிளிக் செய்தால், "விரைவில் வருகிறது " என்ற வாசகம் கிடைக்கிறது!

திட்டம் 7: Wonderoom

இது டெல்லியின் ஜவஹர் பவனில் உள்ள ஒரு நூலகம் மற்றும் செயல்பாட்டு மையமாகும். குழந்தைகள் படிக்க 6000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தங்களிடம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் FB பக்கம் இந்த திட்டத்தால் எளிதாக்கப்பட்ட செயல்பாடுகளைக் காட்டுகிறது மற்றும் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள் என்று கூறுகின்றனர். இதில் உள்ள ஒரே அர்த்தமுள்ள புள்ளிவிவரம் நூலகத்தில் உள்ள 6000 புத்தகங்கள் மட்டுமே!

திட்டம் 8: நிவாரணம் மற்றும் மறுவாழ்வு

இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம் மூளையைக் குழப்பும். முறையான காலக்கோடு அல்லது நிவாரண முயற்சிகள் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. 1991 முதல் இந்தியாவை உலுக்கிய சில பேரழிவுகளின் விவரங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் பிறகு, 5000 குடும்பங்களுக்கு உதவி கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. 9000 நோயாளிகளுக்கு அந்த இலவச மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் 1200 போர்வைகளும் (?!) வழங்கப்பட்டுள்ளன. இத்தனை நன்கொடையாளர்கள் இருந்தும் RGF ஒரு வருடத்திற்கு 50 போர்வை கூட கொடுக்க முடியவில்லையா? இத்தனை நன்கொடையாளர்களும் அதிகாரமும் தங்கள் வசம் இருந்தும் RGF ஆண்டுக்கு 200 குடும்பங்களை கூட ஆதரிக்க முடியவில்லையா?

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு யார் பதிலளிப்பார்கள்?

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் நன்கொடையாளர் பக்கத்தை ஒரு வருடத்திற்கு பாருங்கள். இவ்வளவு பெரிய நிதி வாங்கியதற்கு ஆண்டுக்கு 200 மாணவர்கள், 500 குடும்பங்கள் கூட ராஜிவ் காந்தி அறக்கட்டளையால் பயனடையவில்லை. நம்மில் பலர் சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அறிந்திருப்பார்கள், அவை கூட பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன. இந்த திட்டங்களுக்கு கோடிகளில் செலவிடப்படுவதை அவர்களின் நிதிநிலை அறிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன. கோடிக்கணக்கான பணத்தை வைத்து செய்திருக்கக்கூடிய விஷயங்களா இவை ? சிறுபிள்ளைத் தனமாக வீடியோக்களைச் செய்வதற்குப் பதிலாக, RGF அவர்கள் பெறும் நிதிக்கு ஏன் இவ்வளவு குறைவாக செயல்படுகிறது என்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும்!

Translated From: OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News