21 நாள் ஊரடங்கு.. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின்னால் டாக்டர் ராமதாஸ்?
21 நாள் ஊரடங்கு.. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பின்னால் டாக்டர் ராமதாஸ்?

கொரோனா தொற்று இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
இந்த உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்று விசாரிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் நேரடி தொடர்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனையும் இருப்பதாக மத்திய அரசோடு தொடர்பில் உள்ள தமிழக பாஜகவின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போத கொரோனா தாக்கம் இந்தியாவில் 3வது கட்டத்தை தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச நாடுகளிலுள்ள வைரலாஜி துறையினரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த அடிப்படையில் டாக்டர் என்ற முறையில் அதன் விபரீதத்தை உணர்ந்திருக்கிறார் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக தினமும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தனது கருத்தை தெரிவித்து வந்தார்.
இது போன்ற கொடிய தொற்றை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றார்.
இதனை கேள்விப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்ததாக தெரிகிறது.
அப்போது தான் பிரதமரிடம் பேச விரும்புவதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதன் பின்னர் பிரதமரிடம் கலந்து பேசிவிட்டு சொல்வதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஞாயிறு இரவு பிரதமரிடம் நீங்கள் பேசலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இரவு 11 மணியளவில் பிரதமர் மோடியிடம் பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இது பற்றி பாமக மேலிட தலைவர்கள் கூறியதாவது: கொரோனா தொற்று இந்தியாவில் மிக மோசமானதாக பரவி கொண்டிருக்கிறது.
உலக சுகாதார அமைப்பினரிடமிருந்தும் பல்வேறு நாடுகளின் மருத்துவ நிபுனர்களிடமிருந்தும் கிடைக்கும் தகவல்களை கேட்டு ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன.
கொரோனவை ஒழிப்பதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் அதனை பரவாமல் தடுப்பதுதான் சிறந்த தீர்வாகும்.
நாம் தற்போது நோய் பரவுகின்ற 3வது நிலையில் உள்ளோம். அதனால் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்கள் முழுமையான ஊரடங்கை கொண்டு வாருங்கள்.
மக்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதுதான் சிறந்த தீர்வாகும்.
உங்களின் வார்த்தைக்கு இந்திய மக்கள் மதிப்பளிப்பார்கள். அதனால் முழுமையான ஊரடங்கை கொண்டு வாருங்கள் என பிரதமரிடம் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் போன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜப்பான் நாட்டின் வைரலாஜி நிபுனர்களும் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளனர்.
உங்களின் யோசனைக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார். இதனையடுத்துதான் கடந்த செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த அறிவிப்பில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னால் டாக்டர் ராமதாஸ் யோசனையும் ஒரு முக்கிய காரணம் என்று பாமக கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.