Kathir News
Begin typing your search above and press return to search.

ராமபிரானுக்கு தங்க நூலால் ஆன உடை நாளை பூமி பூஜையன்று சாத்தப்படுகிறது.! #RamMandhir #Ayodhi #PMModi

ராமபிரானுக்கு தங்க நூலால் ஆன உடை நாளை பூமி பூஜையன்று சாத்தப்படுகிறது.! #RamMandhir #Ayodhi #PMModi

ராமபிரானுக்கு  தங்க நூலால் ஆன உடை நாளை பூமி பூஜையன்று சாத்தப்படுகிறது.! #RamMandhir #Ayodhi #PMModi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:46 AM GMT

ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது குழந்தை ராமர் சிலைக்கு அணிவிக்க சிறப்பு உடை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 9 கற்கள் பதிக்கப் பட்டு, தங்க நூலால் தைக்கப்பட்ட 2 உடைகளை சங்கர்லால்,பகவத்லால் என்ற சகோதரர்கள் வழங்கி உள்ளனர்

கடவுளர் சிலைக்கும், சில பூசாரிகளுக்கும் மட்டுமே உடை தைக்கும் தொழில் செய்து வரும் இந்த குடும்பத்தினர், கடந்த ஆண்டுகள் அயோத்தியில் ராமபிரான் சிலைக்கு உடை களை தைத்து வழங்கி வருகின்றனர். அதன்படி நாளைய நிகழ்ச்சிக்காக பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உடைகளை தைத்து வழங்கி உள்ளனர்

இது குறித்து சங்கர் லால் கூறும்போது, 'இந்த 2 உடைகளும் வெல்வெட்டால் செய்யப்பட்டு உள்ளன. இதில் பச்சை நிறம் அந்த நாளுக்கான சிறப்பு நிறமாகவும், ஆரஞ்சு நிறம் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது' என்று தெரிவித்தார்.

Next Story