கிறித்தவக் காப்பகத்தில் குழந்தைகளைக் கற்பழித்த சகோதரர்களுக்குத் தண்டனை !!
கிறித்தவக் காப்பகத்தில் குழந்தைகளைக் கற்பழித்த சகோதரர்களுக்குத் தண்டனை !!

மும்பை ரசயானியில் உள்ள ஷாந்தி அனாதை இல்லத்தின் பராமரிப்பாளர் ராஜேந்திரனின் மகன்கள் ஜாய் ராஜேந்திரன் (29) மற்றும் கிறிஸ்டியன் ராஜேந்திரன் (24) இருவருக்கும் போக்ஸோ சட்டத்தின் படி தண்டனை விதித்து பன்வெல் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஜாய் ராஜேந்திரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 85,000 ருபாய் அபராதம் கிறிஸ்டின் ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 35000 ருபாய் அபராதம் விதித்துள்ளது .
"சர்ச் ஆப் எவர் லஸ்டிங் லைப் மற்றும் சமூக சேவைக் குழுமம் " எனும் கிறித்தவ அமைப்பு நடத்தும் ஷாந்தி அனாதை இல்லத்தின் பராமரிப்பாளராக ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். அவரது மனைவி சலோமி ராஜேந்திரன் (51) மற்றும் அவரது இரு மகன்களும் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர்.
சகோதர்கள் ஜாய் மற்றும் கிறிஸ்டியன் இருவரும் அனாதை இல்லத்தின் வசிக்கும் 14 வயதிற்கும் குறைவான 8 பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிர்ச்சிகாரமான செய்தி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மனித மிருகங்களின் கோர செயல் தெரிந்தும் அவர்களின் தாய் சலோமி அவர்களை கட்டுப்படுத்தவோ காவல் துறையிடம் புகாரளிக்கவோ இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அவருக்கும் 1 ஆண்டு சிறை மற்றும் 1000 ருபாய் அபராதம் ஆக மொத்தம் மூவருக்கும் சேர்த்து 121000 ருபாய் அபராதம் என்று தீர்ப்பளித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முதலில் இந்த செய்தி வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. அனாதை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளில் ஒருவர் தன் ஆசிரியரிடம் தான் அனுபவிக்கும் இன்னல்களை பற்றிக் கூறியுள்ளார் . அதன் பிறகு குழந்தைகள் நல வாரியம் இதை விசாரித்து குற்றவாளிகள் தண்டனை பெற உதவியுள்ளது.
நாடு முழுவதும் கிறித்தவ தொண்டு நிறுவனங்களில் இது போன்ற பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுத்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அரசாங்கத்தின் காதுகளில் இது விழுமா? நீதிமன்றங்கள் இவற்றை உடனடியாகக் கவனிக்குமா?