Kathir News
Begin typing your search above and press return to search.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர்களுக்கு வருவாய் சான்றிதழ் குழப்பம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - தமிழக அரசு #Reservation #ModiGovt #TNGovt

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர்களுக்கு வருவாய் சான்றிதழ் குழப்பம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - தமிழக அரசு #Reservation #ModiGovt #TNGovt

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர்களுக்கு வருவாய் சான்றிதழ் குழப்பம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - தமிழக அரசு #Reservation #ModiGovt #TNGovt

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 3:24 AM GMT

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சலுகைகளை பெற தாசில்தார்களிடம் வருமானம் மற்றும் சொத்து விவர சான்றிதழை வாங்கி சம்பந்தப்பட்டவர்கள் சமர்பிக்கவேண்டும். ஆனால், இந்த சான்றிதழை வழங்கவேண்டாம் என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ் வழங்கவேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற்று விட்டதாகவும், தற்போது சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு வருவாய் சான்றிதழ் நிபந்தனைகளுடன் அரசு வழங்குகிறது. இந்த சான்றிதழ் மத்தியஅரசின் பணி மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சான்றிதழில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மத்திய அரசு போலவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் சலுகை கிடைக்கின்றன. தற்போது தமிழக அரசு வழங்கும் சான்றிதழ்கள், பிறமாநிலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிபந்தனையை நீக்கி சான்றிதழ் வழங்கஅரசுக்கு உத்தரவிடவேண்டும்" என்று வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில்ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், "மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் தான் உயர் வகுப்பினருக்கு வருமான சான்றிதழ் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த நிபந்தனை விதிக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

இதையடுத்து இந்த வழக்குகளை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், நிபந்தனையுடன் சான்றிதழ் வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தியும், உரிய விளக்கத்துடனும் பதில் மனுதாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story