உயிரை பணயம் வைக்கும் இவர்களை போற்றுவோம்.. கண்கலங்குகிறது.. நெஞ்சம் பதறுகிறது.!
உயிரை பணயம் வைக்கும் இவர்களை போற்றுவோம்.. கண்கலங்குகிறது.. நெஞ்சம் பதறுகிறது.!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை இளைஞர்கள் பலர் மதிக்காமல் ஊர் சுற்றி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் கொரோனா தொற்றால் இறப்பதை தவிர்க்க முடியும்.
ஆனால் பல மாநிலங்களில் இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என ஆபத்தை உணராமல் வெளியில் சுற்றிதிரிகின்றனர்.
இவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதில் ஒரு சில இளைஞர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் வீட்டில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு டீவி பார்த்துக்கொண்டு, போனை நோண்டிக் கொண்டிருக்கிறோம்.
வீட்டில் நமக்கு ஒரு கொசு கடித்தாலே கொசுவர்த்தியை பொருத்தி சுகமாக தூங்குகிறோம்.
ஆனால் படத்தில் இருக்கும் ஒரு காவலரின் கைகளை பாருங்கள் எத்தனை கொசு ஆனாலும் அத்தனையும் தாங்கிக்கொண்டு தூங்குகிறார் பாருங்கள் எவ்வளவு சோர்வு இருந்தால் அவர் இதுபோன்று தூங்குவார்.
இவர்களின் நலன் கருதியாவது நாம் வெளியே செல்லாமல் 21 நாட்கள் முடிவடையும் வரைக்கும் தனித்திருப்போம்.
மருத்துவர்கள் பணி போற்றத்தக்கதுதான் அதைவிட இவர்களின் பணி குறைந்ததல்ல எனவே மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கியது போன்று காவல்துறையினர்க்கும் 2 மாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து காவலர்களும் நமக்காக இரவு பகலாக பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.