Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க இவ்வளவு மாதங்கள் ஆகும் ?

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க இவ்வளவு மாதங்கள்  ஆகும் ?

Praveen KumarBy : Praveen Kumar

  |  9 April 2020 10:43 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரசால் தற்போது வரை 5734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 164 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக மட்டுமே தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் "கொரோனா கட்டுக்குள் வந்த பின்பே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை" என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மேலும் இதனால் எந்த இந்தியருக்கும் பாதிப்பு இல்லை என்ற தெரிந்த பின்னரே இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சோதனையான நேரத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் 'நன்றி' என்றும் ஒன்றிணைந்து இதையும் கடப்போம் என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/HardeepSPuri/status/1247800766154166273?s=19

Next Story