Kathir News
Begin typing your search above and press return to search.

புலம்பெயரும் மக்களுக்கு உதவும் வகையில் சாலை அமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 7:50 AM GMT

இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனா அச்சத்தால் பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை மீண்டும் பணியமர்த்த மாநில அரசிடம் பேசி வருகிறோம்.

நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் சாலை மேம்பாட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்பு பணிகள் புதியமுறையின் மூலம் நிலம் கையகப்படுத்துவதில் அரசு ரூ.16,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் அதிக அளவிலாக சாலை மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Next Story