Kathir News
Begin typing your search above and press return to search.

பசியால் வாடும் 1 லட்சம் பேருக்கு தினமும் உணவு.. உதவிக்கு இலவச ஆம்புலன்ஸ்.. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சேவை!

பசியால் வாடும் 1 லட்சம் பேருக்கு தினமும் உணவு.. உதவிக்கு இலவச ஆம்புலன்ஸ்.. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சேவை!

பசியால் வாடும் 1 லட்சம் பேருக்கு தினமும் உணவு.. உதவிக்கு இலவச ஆம்புலன்ஸ்.. தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சேவை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 2:27 AM GMT

ஊரடங்கு உத்தரவால், கோவையில் உணவின்றி தவிப்போரின் பசி ஆற்றும் விதமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் சேவாபாரதி சார்பில், 15 நாட்களாக இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.ஆர்.எஸ்., புரம் சத்குரு சேவா ஆசிரமத்தில் உணவு தயாரிப்பு, வினியோகம் என, 1,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேவா பாரதி மாநிலத் தலைவர், ரங்க ராமநாதன் கூறியதாவது:தினமும், 1,750 கிலோ அரிசி, 500 கிலோ தக்காளி, 300 கிலோ வெங்காயம், 400 லிட்டர் கடலை எண்ணெய், 14 காஸ் சிலிண்டர்கள் கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது.உணவின்றி தவிப்போரின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்குவதுடன், அரசு மருத்துவமனை, வெளிமாநிலத்தவர்,மின் மயான பணியாளர்களுக்கு உணவு வழங்குகிறோம்.

இனிமேல் தமிழகம் முழுவதும் எங்கள் சேவையை விஸ்தரித்து தினமும் மேலும் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும், 100 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கப்படுகிறது. இன்று முதல், நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

'கொரோனாவில் இருந்து, மக்கள் முற்றிலும் விடுபடும் வரை இலவச உணவு வழங்கப்படும்' என சேவாபாரதி தெரிவித்துள்ளது. உணவு பெறவும், மளிகை பொருட்களை கொடையாக வழங்கவும், 99651 48291, 63812 83852, 70100 25966 ஆகிய போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News