3-வேளையும் உணவளிக்கும் மாவட்ட ஆட்சியருக்கு தமிழில் நன்றி தெரிவித்த ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணி.!
3-வேளையும் உணவளிக்கும் மாவட்ட ஆட்சியருக்கு தமிழில் நன்றி தெரிவித்த ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணி.!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையொட்டி, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. புதுச்சேரி மாநிலத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த 30-ஆம் தேதி முதல் மாநில பேரிடா் நிதியைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடில்லாத ஆதரவற்றோருக்கு தன்னாா்வலா்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வாடிம் போகஸ்ரோவ் என்ற ரஷ்ய நாட்டைச் சோ்ந்தவா் தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் புதுச்சேரியில் சிக்கிக் கொண்டாா். பின்னா், ரஷிய தூதரகத்தின் வேண்டுகோளின்படி, அவா் புதுச்சேரி ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டாா்.
இவருக்கு கடந்த 23-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, தன்னாா்வலா்கள் தினமும் 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனா். அதன்படி, வாடிம் போகஸ்ரோவ் தனக்கு கடந்த 15 நாள்களுக்கும் மேலாக உணவு வழங்கி வரும் மாவட்ட நிா்வாகத்துக்கு தமிழில் நன்றி தெரிவித்தாா்.
இந்த இக்கட்டான சூழலில் மாவட்ட நிா்வாகம் வழங்கி வரும் உணவால் தான் உயிா் வாழ்வதாக தமிழில் நன்றி தெரிவித்து உருக்கமாக விடியே பதிவு ஒன்றை அவா் வெளியிட்டாா். தற்போது அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.