உணவுக்காக தவிக்கும் 5000 பேருக்கு உணவு அளிக்கும் - சச்சின் தெண்டுல்கர்.!
உணவுக்காக தவிக்கும் 5000 பேருக்கு உணவு அளிக்கும் - சச்சின் தெண்டுல்கர்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இந்த தினக்கூலியை பணிபுரியும் நபர்கள் உணவுக்காக சிரமம் படுகின்றனர்.மேலும் வீடு இல்லாமல் வீதியில் வசிக்கும் மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
இவர்களுக்காக பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து உணவுகளை வழங்கி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 5 ஆயிரம் பேருக்கு ஒரு மாதம் வரை உணவு அளித்து வருகிறார். இதனை அந்த தொண்டு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஊரடங்கு சமயத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிய சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு நன்றி. 5 ஆயிரம் பேருக்கு ஒரு மாதம் வரை உணவு வழங்கும் பொறுப்பை அவர் செய்கிறார்.மேலும் பலர் பேர் இதனை போல தங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு தரவேண்டும் என அப்னாலயா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.