இந்தியாவுக்காக ₹1.25 கோடி நிதி திரட்டிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!
இந்தியாவுக்காக ₹1.25 கோடி நிதி திரட்டிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் காணாமல் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் பரவியது. இதனால் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தருணத்தில் உணவு உள்பட பல அடிப்படை தேவைக்கு அவதிப்படும் ஒரு லட்சம் மக்களுக்கு ₹1.25 கோடி நிதி திரட்டிய இந்தியா டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
இது குறித்து அவர் கூறியது: சென்ற வாரம் ஒரு குழுவாக செயல்பட்டு அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்தோம் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுகளை கொடுத்தோம். ஒரு வாரத்தில ₹1.25 கோடி நிதியை திரட்டி அந்த பணத்தை ஒரு லட்சம் பேருக்கு உதவியை அளிக்கும். மேலும் இந்த சேவையை தொடர்ந்து செய்வோம் எனக் கூறியுள்ளார்.