சவுதி மன்னரின் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு - உலகையே திருப்பி போட்ட கொரோனா !
சவுதி மன்னரின் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு - உலகையே திருப்பி போட்ட கொரோனா !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் கொரோனாவால் இதுவரை 3000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தில் 150 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி மன்னர் சல்மான் மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் தங்களை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தங்களை தனித்தீவில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
புதிய நகரத்தில் இருக்கும் அரசவையில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் இந்த செய்தியை தெரிவித்துள்ளார். மன்னரின் குடும்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளவரசர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அரேபிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ததால் தான் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு குடும்பத்தில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என தெரியவில்லை. இதனால் 500 படுக்கைகள் மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் தயாராக இருக்கிறது என மருத்துவ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2518545