மாணவர்களுக்கு இணையத்தில் பாட புத்தகம் - அசத்தும் பள்ளி கல்வித்துறை!
மாணவர்களுக்கு இணையத்தில் பாட புத்தகம் - அசத்தும் பள்ளி கல்வித்துறை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் அடுத்த பருவ செமஸ்டர் தொடக்கத்தில் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஆனால் இதற்கு முன்பே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டத்து.
இந்நிலையில் அடுத்த ஆண்டு படிக்கும் பாடப் புத்தகங்கள் அச்சடிக்க ஆரம்பிக்க இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அச்சடிக்க மார்ச் மாதத்திலேயே டெண்டர் விடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணத்தால் எதுவும் அச்சடிக்கவில்லை.
மேலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இ-புத்தகம் மூலம் பாட புத்தகங்களை இணையதளத்தில் வெளியிட அரசு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதல் வேலையாக 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ-புத்தகம் இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட பள்ளிகல்வித்துறை முயற்சித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Source: Dinamalar