வாழ்வில் வெல்ல வெற்றியாளர்கள் பகிரும் ரகசியம்
வாழ்வில் வெல்ல வெற்றியாளர்கள் பகிரும் ரகசியம்

சுயத்திறன், சுய மரியாதை மற்றும் சுய உறுதி, இந்த மூன்றும் சமநிலையில் இருக்கும் ஆளுமைக்கு இருக்க வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள். தலைவனின் செயல்களில் வெளிப்படும் நம்பிக்கை அவனை பின் தொடர்பவர்களையும் தொற்றி கொண்டு அதை விட பல மடங்கு உயர்வான நம்பிக்கையுடன் அவர்களை நடையிட வைக்கும்.
ஜார்ஜ் வாஷிங்கடன் கார்வார் அவர்களின் வார்த்தையின் படி "எங்கே நோக்கம் இல்லையோ அங்கே நம்பிக்கை இருப்பதில்லை" மாபெரும் கனவு, உச்சகட்ட இலக்கு அதை நோக்கிய நடைமுறைக்கு சாத்தியப்படும் செயல்திட்டம் இதுவே ஓர் தலைவனின் கண்கள் வரையும் வெற்றி சித்திரம். எவையெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக, நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்விக்கான இடமாக அமைகிறதோ அங்கெல்லாம் தன நோக்கத்தின் மூலம்,தொலைநோக்கு பார்வையின் மூலம், தீர்க்கமான செயல் திட்டத்தின் மூலம் அடைந்து வெற்றி காண்பதே ஓர் தலைவனின் தலையாய பண்புகளுள் ஒன்று.
ரிச்சர்ட் பிரண்ட்சன் விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனர். இவர் தன்னுடைய சுய சரிதையில் எழுதியிருக்கும் வாசகம் "என்னை உயர்வாக எண்ணியத்திலேயே வாழ்க்கை மீதான என்னுடைய ஆர்வம் பிறந்தது, வாழ்க்கையை முழுமையாக வாழ்வதன் மூலம் கற்பனைக்கு எட்டாத சவால்களை எதிர்கொண்டு அவற்றை அனாசியமாக அடைந்து உயர்வதே இருந்தது அதை செய்து முடிக்க வேண்டும் என தோன்றியது."
இந்த இலக்கை அடைய அவர் எடுத்து கொண்ட சவால்களை உலகம் அறியும் . பெரிதாக கனவு காண்பதற்கான துணிவு, தன் எண்ணங்களை நிதர்சனமாக்க அவர் வகுத்த திட்டம் இவையாவும் இன்று அவரின் விமான நிறுவனத்தை ஐரோப்பியாவின் முன்னணி விமான நிறுவனமாக மாற்றியுள்ளது.
தோல்விகளை ஏற்று கொள்ளுதல்
தலைமைப்பண்புடன் நேரடியாக தொடர்புடைய குணாதிசயம் இது . ஒரு விஷயத்தை புதிதாக தொடங்குகிற பொது அந்த அணைத்து முயற்சிகளும் வெற்றியிலேயே முடிவதில்லை என்பதை அறிந்திருப்பவனே தலைவன்.
"நான் மூன்று முறை கல்லூரியில் தோற்றவன். கிட்டத்தட்ட 30 முறை வேலைக்காக விண்ணப்பித்து நிராகரிக்க பட்டுள்ளேன். காவல் துறையில் வேலைக்கு சேர எண்ணி விண்ணப்பித்தேன் ஆனால் நிராகரிக்கப்பட்டேன் . கிட்டத்தட்ட பத்து முறை அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திற்கு திரும்ப விண்ணப்பித்தேன் நிராகரிக்க பட்டேன் " ஜாக் மா, அலிபாபா நிறுவனரின் வார்த்தைகள் இவை.
உறங்கவிடாத தோல்விகள் அவரை வெற்றி வரலாற்றின் சாதனை மனிதராக மாற்றியிருக்கிறது. தலைமைப்பண்பை வளர்க்க துடிப்போருக்கான முக்கிய முன்மாதிரி.. இவர். டாம் பீட்டர்ஸ் சொல்வதை போல "வேகமாக பரிசோதியுங்கள். வேகமாக தோல்வியடையுங்கள். வேகமாக மீண்டு வாருங்கள்"
எனவே இன்றிருக்கும் நிச்சயமற்ற பொழுதுகளில் தோல்வி என்பது யாருக்கும், எதற்கும் நேரக்கூடியதே... அப்படி நேர்கிற பொது மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பிப்பதும் சூழலை சாதகமாக்கி தப்பி செல்வதும் ஒரு தலைவனை பண்பு அல்ல. அந்த சவாலை எதிர்த்து, பதில் சொல்ல நிர்வாகத்தை திறம் பட எதிர்கொண்டு, அதற்கான மாற்று திட்டத்தை நல்ல முடிவுகளை விரைவில் வழங்கி, குழுவினரை சோர்ந்து விடாமல் தாங்கி பிடிக்கிற பண்பு அதிமுக்கியமான ஒன்று.
ஜான் குவின்ஸி அவர்கள் சொல்வதை போல் " உங்களுடைய செயல்கள் மற்றவர்களை அதிகம் கனவு காண வைத்தால் , அதிகம் கற்று கொள்ள வைத்தால் , இன்னும் அதிகமாக சாதிக்க தூண்டினால் நீங்க தான் தலைவர். "